தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்று (மே. 24) முதல் ஒரு வாரத்திற்கு அமலில் உள்ளது. ஊரடங்கை கண்காணிக்கும் விதமாக திருச்சி மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். ஆம்புலன்ஸ், மருத்துவ தேவை தவிர அனைத்து விதமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வாகன ஓட்டிகள் அரசின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் அதிகளவில் உலா வருகின்றனர். பழைய மருந்து சீட்டுகளை வைத்துக்கொண்டு மருந்துக் கடைகளுக்குச் செல்வதாகவும்வங்கி பாஸ்புக்கை எடுத்துக்கொண்டு வங்கிக்குச் செல்வதாகவும்கூறிக்கொண்டு ஊர் சுற்றி வருகின்றனர். பொதுமக்களின் இந்த செயல் காவல் துறையினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.