கரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் நேற்று (செப். 30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மேலும், திருச்சி உறையூர் அருகே சீராத்தோப்பில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (அக். 1) அதிகாலை 3:30 மணி அளவில் சென்னையிலிருந்து அவரது உடல் திருச்சிக்கு எடுத்து வரப்பட்டது. அதன்படி காலை சுமார் 7 மணியளவில் திருச்சி சீராத்தோப்புக்கு அவரது உடல் வந்தடைந்தது.
பின்னர் சீராத்தோப்பில் உள்ள பாரதி வித்யாஷ்ரம் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராம கோபாலன் உடல் வைக்கப்பட்டுள்ளது. இங்கு திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா தலைமையில் 3 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க...பொறியியல் படிப்பில் சேர சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடக்கம்