திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதில் 18 முதல் 44 வயது வரை விருப்பமுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி செலுத்தும் முகாமை நிறுவன இயக்குநர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ் தொடங்கிவைத்தார்.
ஒரே நாளில் என்ஐடி பணியாளர்கள் 240 பேருக்கு தடுப்பூசி
திருச்சி: தேசியத் தொழில்நுட்பக் கழகப் பணியாளர்கள் 240 பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
trichy nit workers vaccinated in a day
இதனையடுத்து பேசிய அவர், "தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது, அவசியமானது. அனைத்து ஊழியர்களும் நம்பிக்கையுடன் முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்" என்றார். இம்முகாமில் ஒரே நாளில் 240 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்குத் தற்காலிகத் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:'உள்ளம் நிறைந்த கலைஞரை, இல்லத்திலே கொண்டாடுவோம்'