தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி என்ஐடி கல்லூரி மாணவர் நீச்சல் குளத்தில் முழ்கி உயிரிழப்பு! - திருச்சி மாவட்ட செய்தி

திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடியில் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது உயிரிழந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி என்ஐடி கல்லூரி மாணவர் நீச்சல் குளத்தில் முழ்கி உயிரிழப்பு
திருச்சி என்ஐடி கல்லூரி மாணவர் நீச்சல் குளத்தில் முழ்கி உயிரிழப்பு

By

Published : Feb 14, 2023, 9:58 AM IST

திருச்சி: திருவெறும்பூர் துவாக்குடியில் உள்ள என்ஐடி தொழில்நுட்ப கழகத்தின் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்ப கழகத்தில் தமிழ்நாடு மாணவர்கள் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலான மாணவ, மாணவிகளும், சர்வதேச மாணவ மாணவிகளும் கல்லூரியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு தாமஸ் இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பாபு தாமஸ் (37) என்.ஐ.டி. கல்லூரி குடியிருப்பில் தங்கி எலக்ட்ரானிக் பிரிவில் (பிஎச்டி) ஆராய்ச்சி பட்டம் பயின்று வருகிறார்.

பிப்.12-ம் தேதி மாலை வழக்கம் போல் கல்லூரி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்திற்குச் சென்றுள்ளார். அப்படிச் சென்ற பாபு தாமஸ் மாரடைப்பு காரணமாகத் தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனைப் பார்த்த சக கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பாபு தாமசை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பாபு தாமசை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். என்ஐடி கல்லூரி வளாகத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: திருச்சி - அகமதாபாத் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details