தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிற மாநிலங்களைப் போல் தமிழ்நாடு அரசும் குடியுரிமை சட்டத்தை புறக்கணிக்க வேண்டும்..! - இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டம்

திருச்சி: மேற்கு வங்கம், புதுச்சேரி, தெலங்கானா போன்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாடு அரசும் குடியுரிமை சட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறித்தி இஸ்லாமிய இயக்கங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Trichy Muslims Protest Against CAA
Trichy Muslims Protest Against CAA

By

Published : Dec 28, 2019, 12:02 PM IST

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்ட இஸ்லாமிய இயக்கங்கள், மஹத்துல்லா ஜமாத்துகள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் நேற்று மாலை திருச்சி, தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை மைதானத்தில் கண்டன தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், தேசியக் கொடியை கையில் ஏந்தி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். அப்போது போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், இலங்கை தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டிக்கிறோம்.

இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டம்

மேற்கு வங்கம், புதுச்சேரி, தெலங்கானா போன்ற மாநிலங்களில் இச்சட்டம் அமல்படுத்தப் படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டங்களுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டி தொடர் முழக்கப் போராட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோமென சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக!

ABOUT THE AUTHOR

...view details