தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் புதிய டாஸ்மாக் திறப்பு: எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்த கவுன்சிலர்! - டாஸ்மாக்

திருச்சியில் புதிதாக டாஸ்மாக் கடையினை திறக்கும் அரசின் முடிவைக் கைவிட வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் போராட்டம்
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் போராட்டம்

By

Published : Mar 11, 2022, 10:56 PM IST

திருச்சி: தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்த எந்த திட்டமும் செயல்படுத்தாத ஆளும் திமுக அரசானது மதுபானங்களின் விலையை உயர்த்தி அதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் தேடிக்கொண்டது. இது ஒருபுறம் இருக்க திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் சாலையில் ஏற்கனவே அரசின் இரண்டு டாஸ்மாக் கடைகள் அருகருகே செயல்பட்டுவரும் நிலையில், தற்போது கூடுதலாக பாருடன் இணைக்கப்பட்ட புதிய டாஸ்மாக் கடையினை திறக்க திமுக அரசும், மாவட்ட நிர்வாகமும், டாஸ்மாக் நிர்வாகமும் முயற்சித்து வருவதுடன் நாளைய தினம் இதனை திறக்க உள்ளதாக தெரிகிறது.

பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே புதிதாக திறக்கப்படும் கூடுதல் டாஸ்மாக் கடையினால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடையினை திறக்கும் அரசின் முடிவைக் கைவிட வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சியான சிபிஎம் கட்சியின் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து புதிதாக திறக்கவுள்ள டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் போராட்டம்

தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பிய அவர்களிடம், காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் கடையினை திறக்க மாட்டோம் என உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அருகிலுள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளையும் திறக்காமல் அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:காந்தி, படேலின் மண் குஜராத்: பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details