தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி நீர் ஒரு துளிகூட வீணாக கடலில் கலக்கக் கூடாது - தமிழ்நாடு அரசு - kaveri river news upadate

திருச்சி: காவிரி நீர் ஒரு துளிகூட வீணாக கடலில் கலக்கக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது என பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் கூறியுள்ளார்.

பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி

By

Published : Sep 23, 2019, 3:53 PM IST

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் கட்டப்பட்டுள்ள தற்காலிக தடுப்பணையை பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, தலைமை பொறியாளர்கள் தனபால், எஸ். ராமமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி.,

"காவிரி ஆற்றின் குறுக்கே கரூர் மாவட்டம் நெரூர் கிராமத்திற்கும், நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒருவந்தூர் கிராமத்திற்கு இடையேயும், கரூர் மாவட்டம் குளித்தலை, திருச்சி மாவட்டம் முசிறி இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

காவிரி ஆற்றில் தடுப்பணைகள் கட்ட முடியாது. கதவணைகள் மட்டுமே கட்ட முடியும். காவிரி ஆற்றில் மேலும் கதவணைகள் எங்கெங்கே கட்டலாம் என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது.

காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு மும்முரமாக உள்ளது. முதல்கட்டமாக காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் கரூர் மாவட்டம் மாயவரம் அணைக்கு மேற்புறத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காவிரி நீர் ஒரு துளிகூட வீணாக கடலில் கலக்கக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. அதன் அடிப்படையில் காவிரி நீரை முழுமையாக பயன்படுத்தும் வகையிலான திட்டங்களை செயல்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

இதைவும் படிக்க : தஞ்சாவூர்-காவிரி மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய வேளாண் துறை அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details