திருச்சி:கொட்டப்பட்டு பகுதியில் அரசுக்கு சொந்தமான ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மேடையில் பேசினர். அப்போது வாழ்த்துரை வழங்குவதற்காக திருநாவுக்கரசு பேசிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென மின் விநியோகம் நிறுத்தப்பட்டது இந்நிலையில் தமிழகத்தில் மின் நிறுத்தம் என்பது தொடர்ந்து பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது எனவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் எனவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Senthil Balaji: புழல் சிறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி.. சுயநினைவுடன் மாத்திரை சாப்பிட்டதாக தகவல்!
மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் பிரச்னை இருந்து வருகிறது. தமிழக அரசு மின் விநியோகத்தை சீரான முறையில் அனைவருக்கும் வழங்கி வர வேண்டும் எனவும் இந்த மின் பிரச்னை பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன் தற்போது அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என நினைக்கிறேன் என்றார்.