நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தேர்தல் வெற்றிக்கு பின்னர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி வந்தார். அப்போது, திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பிரதிநிதிகள் இன்று காலை ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி சான்றிதழை ஸ்டாலினிடம் காண்பித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.