தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையை போல் திருச்சியிலும் மெட்ரோ ரயில்.. ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையம்.. திருச்சி மேயர் கொடுத்த இன்ப அதிர்ச்சி! - CM stalin

ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையம் திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ளது. அதேபோல் சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை அமைய உள்ளது. இந்த திட்டத்தின் பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளது என திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Trichy
திருச்சி

By

Published : Aug 17, 2023, 11:48 AM IST

திருச்சியில் விரைவில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள்

திருச்சி:சிறந்த செயல்பாடுக்கான விருது திருச்சி மாநகராட்சி வழங்கப்பட்டது. சுதந்திர தின விழாவில் விருதினை மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் பெற்றனர்.

இது குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் கூறுகையில், "இந்த சுதந்திர தின விழாவில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இது மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக உள்ளது. திருச்சி மாநகராட்சி பொருத்தவரை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற காரணத்தால் திருச்சியை முன்மாதிரி மாநகராட்சியாக உருவாக்குவது அவரின் நீண்ட நாள் கனவாக உள்ளது.

அதனை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழக முதலமைச்சரிடம் பல்வேறு நிதி ஆதாரங்களை பெற்று திருச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதன்படி திருச்சி மாநகராட்சியில் நான்கு பெண் மேயர்களுக்கு பிறகு, ஐந்தாவது மேயராக எனக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு பெற்று தந்தார். அந்த முறையில் அவருக்கு சிறப்பான முறையில் செயல்பட்டு திருச்சியை சிறந்த மாநகராட்சியாக உருவாக்க அல்லும் பகலுமாக நானும் மாநகராட்சி ஆணையரும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதையும் படிங்க:குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் உள்பட 21 பேர் மீது வழக்கு - சிபிஐ தகவல்!

எங்களின் இரண்டு பேரும் முயற்சியும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேருவின் வழிகாட்டுதலின் பெயரில் தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி பெயர் பெற்றுள்ளது. மத்திய அரசின் மூலம் திருச்சி மாநகராட்சி சுற்றுப்புற சூழலில் சிறந்த மாநகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் விருதினை பெறுவதற்கு முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறோம்.

இந்த பரிசினை பெறும்போது நகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள், என்னுடைய சக நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருமே இந்த பரிசினை பெற முயற்சி செய்துள்ளோம். ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையம் திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக அமைய உள்ளது. அதேபோல் சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை அமைய உள்ளது.

இந்த திட்ட பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஆகவே அடுத்த நிதியாண்டில் தமிழக நாரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு தமிழக முதலமைச்சரிடம் இதற்கான ஆணையைப் பெற்று நடைமுறைப்படுத்த உள்ளார். பேரூராட்சி இணைப்புக்கான அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடு அடுத்த ஆண்டு மாநகராட்சியுடன் இணைக்கப்படும்.

திருச்சி மாநகராட்சியில் அனுமதியின்றி ஒட்டப்படும் போஸ்டர்கள் திருச்சி மாநகராட்சி ஆணையரின் கண்காணிப்பு படி அதற்கான வரையறை செய்யப்படும். மேலும், திருச்சி மாநகராட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்படும் இடத்தை அகற்றி அதில் வண்ண ஓவியங்கள் வரைந்து போஸ்டர்கள் ஒட்டுவதை தவிர்க்க தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விளம்பர போஸ்டர்கள் ஒட்டுவதற்காக திருச்சி மாநகராட்சி சார்பில் 75 இடங்களில் அதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி மற்ற இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கு மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என திருச்சி மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:"10 ஆண்டுகளானாலும், திமுகவால் நீட்டை ரத்து செய்ய முடியாது" - எடப்பாடி பழனிசாமி!

ABOUT THE AUTHOR

...view details