திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊரடங்கை பயன்படுத்தி அவசரச் சட்டங்களைப் போட்டு தேசியத்தை அடகு வைக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வருமான வரி செலுத்தாத குடும்பங்கள் அனைத்திற்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணமாக வழங்க வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு நபர் ஒருவருக்கு 10 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்க வேண்டும், எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரம் ஆக்குவதை கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும், சுற்றுச்சூழலை பாதிக்கும் புதிய அவசர சட்டத்தை கைவிட வேண்டும், மும்மொழி கொள்கையை திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என்பன போன்ற 15க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.