திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜான் பிரான்சிஸ். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் தனது தந்தைக்கு மருந்து வாங்கிகொண்டு இருசக்கர வாகனத்தில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வலசுப்பட்டி என்னும் இடத்தின் அருகே வந்தபோது, அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக ஒருவழிப்பாதையில், பெத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அஜித்குமார், ஆனந்த், குமார் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது எதிரில் வந்த ஜான் பிரான்சிஸ் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.