திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகாவில் சோழமாதேவியில் நில அளவை அலுவலராக பணிபுரிபுரியும் சுரேஷ் என்பவரிடம் அதே பகுதியில் பாய்லர் தொழிற்சாலையில் பணிபுரியும் செல்வம் என்பவர் தனது நிலத்தை அளந்து தருமாறு அணுகியுள்ளார்.
நிலத்தை அளந்து, பட்டா வழங்க ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என சுரேஷ் கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து செல்வம் அம்மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
நிலத்தை அளக்க லஞ்சம் கேட்ட சர்வேயர் கையும் களவுமாக கைது! அவர்களின் அறிவுரைப்படி நேற்று மாலை சுரேஷிடம், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செல்வம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் அலுவலர்கள் சுரேஷசை கையும் களவுமாக பிடித்தனர். அதைத் தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க : சமூக வலைத்தளத்தில் நீதித்துறை குறித்து அவதூறு வீடியோ - மூன்று பேர் கைது!