திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஐந்து வடமாநில இளைஞர்களிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
காவல் துறையினரை கண்டதும் விடுதியில் இருந்த ஒரு வடமாநில இளைஞர் தப்பியோட முயன்றபோது கால் உடைந்து காயமடைந்தார். உடனே அவரை காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.