தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் அதிர்ச்சி வீடியோ !

திருச்சி : லலிதா ஜுவல்லரியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான புதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

trichy-lalitha-jeweller

By

Published : Oct 3, 2019, 7:16 PM IST

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பிரபலமான லலிதா ஜுவல்லரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முகமூடி அணிந்த ஆசாமிகள் கடையின் சுவற்றில் ஓட்டை போட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் ஏழு தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கடை உள்ளே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான புகைப்படங்கள் நேற்று வெளியானது. இதில் கொள்ளையர்கள் மிருக வடிவிலான முகமூடி அணிந்து, கைரேகைகள் பதிவாகாத வகையிலான ஆடைகளை அணிந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இந்தக் கொள்ளை சம்பவத்தில் இரண்டு நபர்கள் ஈடுபட்டிருப்பது சிசிடிவி மூலம் தெரியவந்தது. இந்நிலையில் கடையின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் அவர்கள் இருவரும் நகைகளை திருடும் சம்பவம் பதிவாகியுள்ளது. இது பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி

இதற்கிடையில் புதுக்கோட்டையில் ஒரு விடுதியில் தங்கியிருந்த ஆறு வடமாநிலத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் கம்பளி போர்வை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. எனினும் இவர்களுக்கும் இந்த கொள்ளை சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை - நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details