தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’பணத்தை வாங்கிட்டு எல்லாரும் என்னை ஏமாத்துறாங்க’ - தற்கொலை செய்து கொண்ட பெண் காவலரின் வாக்குமூலம்! - திருச்சி பெண் காவலர் தற்கொலை

திருச்சி: பணியிலிருந்தபோது எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் காவலரின் வாக்குமூலம் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி உள்ளது.

பெண் காவலர் பவானி
பெண் காவலர் பவானி

By

Published : Jul 1, 2020, 7:27 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் பவானி (35). இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி ஆயுதப் படையில் பணியாற்றியபோது, இரண்டு பெண் காவலர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை கடனாக கொடுத்துள்ளார். ஆனால், வாங்கிய பணத்தை அவர்கள் திருப்பி தரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பவானி, கடந்த 28ஆம் தேதி பணியிலிருந்தபோது எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெண் காவலரின் வாக்குமூலம் வீடியோ

மேலும், சிகிச்சையின்போது பவானி அளித்த வாக்குமூலம் மற்றும் அவரது சகோதரி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த மணப்பாறை காவல் துறையினர், பணியில் இருக்கும்போது பெண் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், பவானி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக பணத்தை திருப்பித்தர மறுத்த காவலர்களின் விவரத்தை தனது செல்போனில் பதிவுசெய்து வைத்திருந்த காணொலி, தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவின் அடிப்படையில் காவலர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதையும் படிங்க:மணப்பாறை அருகே பெண் காவலர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details