திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது கருமலை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரக்கோரி, கடந்த மூன்று மாதங்களாக ஊராட்சி செயலரிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கருமலையைச் சேர்ந்த மக்கள் 30க்கும் மேற்பட்டோர், மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
"தவிக்குதே...தவிக்குதே" - இது திருச்சி அருகே நீரின்றி தவிக்கும் ஓர் கிராமத்தின் குரல்!
திருச்சி: கருமலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆழ்குழாய் கிணறுகளில் மின்மோட்டார் இல்லாததால் தண்ணீருக்காக சாலையை கடக்கும் அவல நிலை ஏற்படுகிறது என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புத்தாநத்தம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊராட்சி செயலர் தங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர மறுத்து வருகிறார் என்றும், ஏற்கனவே குடிநீருக்காக சாலையைக் கடந்து செல்லும்போது ஒருவர் உயிரிழந்துள்ளாரென்றும் மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.
இதன் பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.