தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பன்னாட்டு வாழை கருத்தரங்கம் - தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் அறிவிப்பு - Director of Trichy National Banana Research Center

திருச்சி: பன்னாட்டு வாழை கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் உமா அறிவித்துள்ளார்.

பன்னாட்டு வாழைக் கருத்தரங்கம்
பன்னாட்டு வாழைக் கருத்தரங்கம்

By

Published : Feb 7, 2020, 4:51 PM IST

திருச்சியில் வரும் 23, 24ஆம் தேதிகளில் பன்னாட்டு வாழை கருத்தரங்கம் மற்றும் தேசிய வாழை கண்காட்சி நடைபெறுகிறது. இதுகுறித்து தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் உமா இன்று தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது உமா பேசுகையில், திருச்சி தேசிய வாழை ஆராய்சி மையம் மற்றும் தோட்டக்கலை முற்போக்குச் சங்கம் ஆகியவை இணைந்து திருச்சியில் "வாழை உற்பத்தியில் புதிய கண்டுபிடிப்புகளும், வாழை மதிப்புசார் வியாபாரச் சங்கிலி மேலாண்மையும்" என்ற தலைப்பில் பன்னாட்டு வாழை கருத்தரங்கம் வரும் 23, 24 ஆம் தேதிகளில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டப வளாகத்தில் நடத்த இருக்கிறது.

பன்னாட்டு வாழைக் கருத்தரங்கம்

இதில், ஆராயச்சிகளும், தொழில் வாழை வணிகத்திலுள்ள வாய்ப்புகளையும், அச்சுறுத்தல்களையும் ஆராய்ந்து, அதற்குண்டான தீர்வுகளையும், உத்திகளையும், அது தொடர்பான ஆராய்ச்சி தேவைகளையும் கண்டுபிடிக்க வழிவகுக்கும் நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், பிரேசில், பெல்ஜியம், உகாண்டா, செக் குடியரசு, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரானஸ், ரோம், நைஜீரியா, ஜாம்பியா, நெதர்லாந்து, இலங்கை, மலேசியா, பிலிப்பைன்ஸ் இந்தோநேசியா போன்ற நாடுகளின் விஞ்ஞானிகளும், வாழை விவசாயிகளும், மாணவர்களும் கலந்துகொள்கின்றனர்.

மேலும் கருத்தரங்கில், வாழை சாகுபடியில் நிலவும் உயிரிசார் மற்றும் உயிரிசாரா பிரச்னைகளைக் கையாளும் மேலாண்மை முறைகளும், வாழை மதிப்புசார் வியாபார சங்கிலி மேலாண்மை முறைகளும் இந்திய வாழை எற்றுமதிக்கான வழிநடப்பு உத்திகளும் விவாதிக்கப்படஇருக்கின்றன. இந்த கருத்தரங்கில் இந்தியாவின் 300க்கும் அதிகமான வாழை ரக தார்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. இதில் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் வாழை விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர்” என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details