திருச்சி கோட்டை அருங்காட்சியகத்தில் 2009ஆம் ஆண்டு 31 பஞ்சலோக சிலைகள் திருடப்பட்டன. அதுதொடர்பாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவினர் நான்காண்டுகளுக்குப் பிறகு ஒன்பது குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 31 பஞ்சலோக சிலைகள் மீட்கப்பட்டன. ஆனால் அவ்வழக்கில் பத்தாவது குற்றவாளியான காரைக்குடி சரவண பெருமாள்(40) மட்டும் சிக்காமல் தலைமறைவாக இருந்துவந்தார்.
சிலை கடத்தல் வழக்கு: 11 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது - திருச்சி சிலை கடத்தல் வழக்கு
தஞ்சாவூர்: திருச்சி அருங்காட்சியக சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில், 11 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
-thanjavur
இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சரவண பெருமாள் சிலை தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிபதி விஜயலட்சுமி, வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவர் ஆறு கிலோ தங்கம் கொள்ளை போன வழக்கிலும் தேடப்பட்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமான வழக்கு: அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு!