திருச்சியில் மறைந்த திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவிற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மேற்கு பகுதி செயலாளர் சரண்சிங் தலைமையில் இன்று (செப். 26) காலை உறையூர் பாண்டமங்கலத்தில் எஸ்.பி.பி. திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் ஏ.ஐ.ஒய்.எஃப். மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் செல்வகுமார், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், மாவட்டத் தலைவர் முருகேசன், ஏ.ஐ.எஸ்.எஃப். மாவட்டச் செயலாளர் இப்ராஹிம், சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சிவா, தமிழ்நாடு கலை மற்றும் இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் சதீஷ், ஏ.ஐ.எஸ்.எஃப். புறநகர் மாவட்டத் தலைவர் சூர்யா, ராஜமுஹம்மது, முருகன், ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.