தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"விளையாட்டை இயக்கமாக நடத்தி வருகிறோம்" - கல்லூரி விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு! - திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி

Trichy Holly Cross College Sports Festival : திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியின் 100-ஆம் ஆண்டு விளையாட்டு விழாவில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், விளையாட்டை ஒரு இயக்கமாக நடத்தி வருவதாகவும், 100 ஆண்டுகளைக் கடந்து கல்வி சேவை ஆற்றி வரும் கல்லூரிக்கு மாநில அரசு துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.

trichy holy cross college 100th anniversary sports day minister udhayanidhi stalin kn nehru anbil mahesh participated
Etv Bharatதிருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியின் 100-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 1:05 PM IST

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியின் 100-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

திருச்சி:சிங்காரத் தோப்பு பகுதியில் உள்ள ஹோலிகிராஸ் கல்லூரியில் 100-ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சியில் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, "100-வது ஆண்டு விளையாட்டு போட்டிக்கு தகுதியான, சரியான நபரை தான் சிறப்பு விருந்தினராக அழைத்து உள்ளீர்கள். இவர், நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற அறப்போராட்டத்தில் எழுப்பிய உரை வரலாற்று சிறப்புமிக்கது.

மனிதன் என்பர் தெய்வமாகலாம், மற்றவர்களுக்காக உழைப்பவன் தலைவனாகலாம் என சொல்லுக்கு உகந்தவாறு செயல்பட்டார். தொடர்ந்து செயலாளராக இருந்தவர் தற்போது எங்கள் தலைவனாக உள்ளார். மேலும் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதேசமயம் பொது சேவை பணியில் தொடர்ந்து முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மிக பெரிய போராளி தான், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பெண்கள் அதிக தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். வரும் ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தான் அதிக அளவில் கலந்து கொள்வார்கள்.

கலைஞர் உருவாக்கிய துறையை பேரன் உதயநிதி ஸ்டாலின் வளர்த்து வருகிறார். விளையாட்டுத் துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனை பெண்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும். உழைப்பாளி, போராளி, தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவார்.

இந்த நிகழ்ச்சியில் எதிரே உள்ள மைதானம் எப்படி காலியாக உள்ளதோ, அதேபோன்று அமைச்சர் உதயநிதிக்கு எதிரி யாரும் இல்லை. 100 ஆண்டுகளைக் கடந்த இந்த கல்லூரிக்கு எப்போதும் திமுக அரசு உறுதுணையாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, "கிறித்துவ சமுதாய பெருமக்கள் தான் திருச்சியின் வளர்ச்சிக்கு முக்கிய அங்கமாக இருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின், திருச்சிக்கு போறியா நல்லபடியாக போயிட்டு வா என்று வாழ்த்தி அனுப்பியவர் முதல்வர் தளபதி ஸ்டாலின்" எனத் தெரிவித்தார்.

பின்னர் பேசிய சிறப்பு அழைப்பாளர் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "என்னை ஸ்போர்ட்ஸ் டே என்று தான் அழைத்தார்கள், ஆனால் இங்கு கல்ச்சுரல்ஸ் டே வாக அமைந்துள்ளது. கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. இதற்காக நீங்கள் அனைவரும் பலமுறை வகுப்பறையை கட் அடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுடைய தொடர் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த கலை நிகழ்ச்சியின் வெற்றியாகும்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் என்னை மீண்டும் கல்லூரி காலத்திற்கு அழைத்து சென்று அந்த நினைவுகளை ஞாபகப்படுத்தியது. திருச்சியில் நடைபெறக்கூடிய கல்லூரி நிகழ்ச்சியில் நிச்சயமாக நீ கலந்து கொள்ள வேண்டும், என உத்தரவிட்டு என்னை அழைத்து வந்ததற்கு அன்பில் மகேஷ் அவர்களுக்கு நன்றி.

1924 ஆண்டு கலைஞர் பிறந்தார், அவருக்கு ஓர் ஆண்டு முந்தையதாக இக்கல்லூரி பிறந்தது. திராவிட மாடல் கொள்கையை முழுமையாக இக்கல்லூரி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பெண்கள் கல்வியை கண்டிப்பாக கற்க வேண்டும், இந்த சமுதாயத்தில் அவர்கள் தனித்து நிற்க வேண்டும், என மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து கூறிக் கொண்டே இருப்பார். அதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்தார்.

குழம்பு கரண்டியை பிடித்த பெண்கள் கையில், புத்தகத்தை கொடுத்தவர் கலைஞர் அவர்கள். 100 ஆண்டுகள் தொடர்ந்து கல்வியை சேவை செய்வது சாதாரண காரியம் இல்லை. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை தமிழ்நாட்டில் கலைஞர் அவர்கள் அமுல்படுத்தினார். பெண்கள் அதிக அளவில் தொடர்ந்து படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கொள்கையில் கலைஞர் உறுதியாக இருந்தார்.

பெண்களுக்கு திருமண உதவித்தொகை, குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு அதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டில் பெண்கள் மேயராக, கவுன்சர்களாக செயலாற்றி வருகிறார்கள். பெண்கள் ஒருபோதும் கஷ்டப்படக் கூடாது என்று மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம்.

வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் காலையில் எந்தவிதமான கஷ்டமும் படாமல் குழந்தைகளை பள்ளிக்கு தைரியமாக அனுப்புவதற்காக பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம், என தொடர்ந்து பெண்கள் கல்விக்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் திமுக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக மருத்துவ காப்பீட்டு திட்டம் பெண்களால் தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு விளையாட்டு துறையில் பெண்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வருகிறோம். குறிப்பாக தற்போது விளையாட்டு துறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் தேசிய அளவிலான போட்டிகள், சர்வதேச அளவிலான போட்டிகளை தொடர்ந்து நாம் நடத்தி வருகிறோம். இதனை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் சர்வதேச அளவிலான பல போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு எப்போதும் தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும். அதேபோன்று நூற்றாண்டுகளை கடந்து தொடர்ந்து கல்வி சேவை செய்து வரும் கல்லூரிக்கும் மாநில அரசு துணை நிற்கும்" என்றார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் பாடத்திட்டத்தை பின்பற்றாதீர்கள்' - ஆளுநர் ரவி அதிரடி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details