தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிசு சிகிச்சையில் திருச்சி அரசு மருத்துவமனை 3ஆம் இடம் - திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: சிசு சிகிச்சையில் திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

சிசு சிகிச்சையில் திருச்சி அரசு மருத்துவமனை 3ஆம் இடம்
சிசு சிகிச்சையில் திருச்சி அரசு மருத்துவமனை 3ஆம் இடம்

By

Published : Nov 26, 2020, 3:11 PM IST

சிசு சிகிச்சையில் சிறப்பாகப் பணியாற்றிய திருச்சி மாவட்ட செவிலியருக்கு தமிழ்நாடு அரசால் விருது வழங்கப்பட்டது. அதனை இன்று (நவ. 26) மருத்துவமனை முதல்வர் வனிதா செவிலியருக்கு வழங்கினார். அப்போது அவருடன் மருத்துவமனை ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர், "திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர், மருத்துவர்கள் சாதனைபுரிந்து-வருகின்றனர். இந்த ஆண்டு குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் நல்ல முறையில் பிறந்துள்ளன.

சிசு சிகிச்சையில் திருச்சி அரசு மருத்துவமனை 3ஆம் இடம்

சிசு சிகிச்சையில் திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர், மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்துவருகின்றனர். இதனால் திருச்சி மாவட்டம் மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் விருது வழங்கினர்.

சிசு சிகிச்சையில் திருச்சி அரசு மருத்துவமனை 3ஆம் இடம்

பிறந்த குழந்தைகளில் 1000 குழந்தைகள் வென்டிலேட்டர் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒன்றரை கிலோவிற்கு குறைவாக இருந்த 150 குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளோம். இந்த ஆண்டு பிறந்த 10 ஆயிரம் குழந்தைகளில் எட்டாயிரம் குழந்தைகள் நல்ல முறையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தனர்.

குழந்தைகளின் தாய்மார்களுக்குத் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுவருகின்றன. கரோனா காலகட்டத்திலும் 325 குழந்தைகள் நல்ல முறையில் திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்தனர். அவர்களில் 10 குழந்தைகள் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது அவர்களும் குணமடைந்துள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை: 'வென்டிலேட்டர் உதவியுடன் ஜார்க்கண்ட் அமைச்சர் சுவாசித்து வருகிறார்'

ABOUT THE AUTHOR

...view details