தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் அரசுப் பொருட்காட்சி தொடக்கம் - திருச்சி அரசு பொருட்காட்சி

திருச்சி: தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவில் அரசு பொருட்காட்சியை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்தார்.

Trichy
Trichy government expo

By

Published : Jan 5, 2020, 2:06 PM IST

திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பொருட்காட்சியை திறந்துவைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், "பாஜக ஆளும் மாநிலங்களுக்குகூட மத்திய அரசு முதலிட விருது வழங்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு இத்தகைய விருது கிடைத்திருப்பது தமிழ்நாடு மக்களுக்கு பெருமை சேர்க்க கூடியது. அந்த அளவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டுசெல்லும் பணியை செய்தி மற்றும் விளம்பரத் துறை மேற்கொள்கிறது, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த ஆட்சி நான்கு ஆண்டுகளை வரும் பிப்ரவரி மாதத்தில் பூர்த்தி செய்கிறது.

இந்த ஆட்சி நான்கு நாள்கள் தாங்குமா, 40 நாள்கள் தாங்குமா, நான்கு மாதம் தாங்குமா? என்று கூறியவர்கள் மத்தியில் இந்த ஆட்சியை நான்கு ஆண்டுகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிலைநிறுத்திக் காட்டியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மாறுபட்ட முடிவை அளித்தார்கள்.

ஆனால் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் ஒன்பது தொகுதிகளில் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். திருச்சியில் இந்தப் பொருட்காட்சி 45 நாள்கள் வரை நடைபெறுகிறது. இது முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகும்" என்றார்.

இந்த விழாவிற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்தார். அமைச்சர் வளர்மதி, ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அரசுப் பொருட்காட்சி தொடக்க விழா

இந்த பொருட்காட்சியில் சுற்றுலாத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, வனத் துறை, அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கரூரில் புதிதாகக் கூடுதல் மகிளா நீதிமன்றம் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details