கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்சியின் பிரதான சந்தையான காந்தி மார்க்கெட், பொன்மலை ஜி கார்னர் திறந்தவெளி மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது பெய்துவரும் கனமழையால் வியாபாரிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் தண்ணீர் நிறைந்து குளம்போல் காட்சியளிப்பதால் காய்கறிச் சந்தை அமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மீண்டும் காந்தி மார்க்கெட்டை திறக்க அனுமதிக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதனிடையே, காந்தி மார்க்கெட்டிற்கு மாற்றாக கள்ளிக்குடி கிராமத்தில் அமைக்கப்பட்ட நவீன காய்கறி வணிக வளாகத்தைத் திறக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் கமலக்கண்ணன் கூறியதாவது, "பொன்மலை ஜி கார்னர் பகுதியில் இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெற்றுவருகிறது. கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழையால், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தத் தண்ணீரில் கழிவுநீரும் சேர்ந்திருப்பதால் கரோனாவைவிட கொடிய தொற்றுப் பரவக்கூடிய வாய்ப்புள்ளது.