திருச்சி மாவட்டம் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம், சட்ட உரிமை பாதுகாப்பு தொழிற்சங்கம் சார்பில் இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாநகர போக்குவரத்து துணை ஆணையர் வேதரத்தினம் தலைமை வகித்தார், சட்ட உரிமை பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் அருண் சித்தார்த், மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி ஆகியோரது முன்னிலையில் அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ஹெல்மெட் அணிவிக்கப்பட்டு, மீண்டும் ஹெல்மெட் அணியாமல் வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து அதிகாரிகள், காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.