திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகரில் குடிசை வீடுகள் அதிகம் உள்ளது. இந்நிலையில் இன்று (அக்.5) அதிகாலை ஒரு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதைக்கண்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்த திருச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர்.