தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடித்து தொடர் உண்ணவிரதப் போராட்டம்! - திருச்சி மாவட்டச் செய்திகள்

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக விவசாயிகள் ரத்தக்கண்ணீர் வடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

trichy-farmers
trichy-farmers

By

Published : Jan 4, 2020, 3:03 PM IST

அதில் அவர்கள்,

  • நகை ஏலம் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட வேண்டும்,
  • வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாயமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும்,
  • காவிரியில் வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் - அய்யாறு - உப்பாறு இணைப்புத் திட்டம், காவிரி - குண்டாறு - வைகை இணைப்புத் திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும்,
  • கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
  • இடுக்கி மாவட்டத்தை கேரளாவிலிருந்து பிரித்து தமிழ்நாட்டுடன் இணைத்து முல்லைப் பெரியாறு பிரச்னை, 58ஆம் கால்வாயில் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
    போராட்டத்தின் போது

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் உண்ணாவிரதம் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. திருச்சி ஜங்சன் அருகே நடைபெறும் இப்போராட்டம் வரும் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் இரண்டாம் நாளான நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அய்யாக்கண்ணுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இந்நிலையில், நேற்று மாலை வரை முதலமைச்சரை சந்திக்க ஆட்சியர் ஏற்பாடு செய்யாததால், இன்று மூன்றாம்நாள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். அதில் ரத்தக் கண்ணீர் வடிக்கும் விதமாக முகத்தில் சாயம் பூசிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details