திருச்சி மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் 2020க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டார். இந்த மறு வரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று முதல் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
மேலும், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ- அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் உதவி ஆணையர்கள் மூலம் பொதுமக்களின் பார்வைக்கு, இந்த வரைவு வாக்குச்சாவடிப் பட்டியல் வைக்கப்பட இருக்கிறது.