திருச்சி மன்னார்புரம் மின்சார வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய ஊழியர்கள் நேற்று (03.11.2020) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் வைத்த கோரிக்கைகள்:
- மின் வட்டங்களில் பணியாற்றும் பொறியாளர், அலுவலர்களின் பதவிகளை ஒழிக்கக் கூடாது.
- துணை மின் நிலையங்களில் ஓய்வு பெற்றவர்களை நியமித்து பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.
- 42 ஆயிரம் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
- சரண்டர் லீவு தொகையை வழங்க வேண்டும். பொறியாளர், தொழிலாளர், பகுதிநேர ஊழியர்கள், அனைவருக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும்.
- மின் உற்பத்தியை மின்வாரியமே செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.