திருச்சியில் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் வரும் ஜனவரி 6ஆம் தேதியன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்தத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தருவார்கள். இதனால் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நேற்று மாலை வைகுந்த ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்க விலாஸ் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை திருச்சி மாநகர ஆணையர் வரதராஜூ புறக்காவல் நிலையத்தைத் திறந்து வைத்தார்.