திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வாழவந்தான்கோட்டை ஊராட்சியில் உள்ள புது பர்மா காலனியில், தண்ணீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை இருந்தது.
குடிநீர் பிரச்னையை தீர்த்து வைத்த திமுக எம்எல்ஏ! - திருச்சி செய்திகள்
திருச்சி: நீண்ட காலமாக தண்ணீர் இன்றி தவித்து வந்த கிராம மக்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குடிநீர் குழாய் அமைத்து கொடுத்துள்ளார்.
திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினரும், திருச்சி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து தங்கள் பகுதியில் குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
அதை ஏற்று அந்த பகுதிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்தார். இதன் மூலம் புதிய போர்வெல், புதிய கைப்பம்பு அமைக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இந்நிகழ்வில், திமுக செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:திமுக எம்எல்ஏ மீது புகார் - அறிவாலயத்தில் குவிந்த கண்ணகி நகர் மக்களால் பரபரப்பு!