தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் மனைவி கண் முன்னே பயங்கரம்; கணவன் சம்பவ இடத்திலேயே பலி - காவல்துறையினர்

திருச்சி மணப்பாறையில் மனைவி கண் முன்னே கணவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணப்பாறை
manapparai

By

Published : Jul 8, 2023, 2:43 PM IST

Updated : Jul 8, 2023, 3:09 PM IST

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கரும்புளிப்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி (60) ஐஸ் வியாபாரி. இவர் தனது மகன்
மாரிமுத்து மற்றும் மூன்றாவது மனைவி சீரங்கம்மாளுடன் மணப்பாறை நோக்கி இன்று காலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது குளித்தலை சாலையில் ஆண்டவர் கோவில் கலிங்கப்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் வந்து இடைமறித்த ஒரு கும்பல் இவர்களை சரமாரியாக வெட்டத் தொடங்கியது. இதில் குப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாரிமுத்து பலத்த காயங்களுடன் கீழே விழுந்தார்.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை டிஎஸ்பி ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க:RN Ravi: டெல்லி சென்றடைந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.. திமுக வார்த்தைப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்துவிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் குப்புசாமி என்பவரின் உறவினர் பெண் ஒருவரின் காதல் பிரச்சினையில் வந்த முன் விரோதம் என்றும், அதில் இடை மறித்து தாக்கிய நபர்கள் கரும்புளிபட்டியைச் சேர்ந்த தினேஷ், பாலாஜி, ஜீவா, மணி, சந்துரு, தேவா மற்றும் கரூர் மாவட்டம் தேவர் மலையைச் சேர்ந்த பிரவீன் என தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த குப்புசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மனைவி கண்முன்னே கணவரும், மகனும் வெட்டப்பட்டது குறித்து வாய் பேச முடியாத சீரங்கம்மாள் செய்கையில் கூறியது பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தது.

இதே போல் கடந்த மாதம், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பி.மேட்டூரை சேர்ந்தவர் ராஜ்குமார்(29). இவரது மனைவி சாரதா(20). இவர்கள் இருவரும் 2 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். உப்பிலுயபுரம் அருகே சோபனபுரத்தில் விஜயசேகரன் என்பவரின் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர்.

நிலத்தின் அருகே உள்ள விட்டில் தங்கி இரண்டு வருடங்களாக விவசாயம் பார்த்து வருகின்றனர். திடீரென்று இருவரும் கொலை செய்யப் பட்டு உள்ளனர். இவர்கள் இருவருரையும் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி இருப்பது போலீசார் மூலம் தெரிய வந்தது.

இது போன்ற சம்பவம் திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விசிட்.. விமான நிலையத்தில் மல்லுகட்டிய அதிமுகவினரால் பரபரப்பு!

Last Updated : Jul 8, 2023, 3:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details