தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடர்: மேயர் அன்பழகன் தாக்கல் செய்தார்! - பட்ஜெட் கூட்டத் தொடர் மேயர் அன்பழகன் தாக்கல் செய்தார்

திருச்சி மாநகராட்சியின் 2022-2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை இன்று(மே30) மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் தாக்கல் செய்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடர் மேயர் அன்பழகன் தாக்கல் செய்தார்
திருச்சி மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடர் மேயர் அன்பழகன் தாக்கல் செய்தார்

By

Published : May 30, 2022, 7:20 PM IST

Updated : May 30, 2022, 7:47 PM IST

திருச்சி மாநகராட்சியின் 2022-2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை இன்று(மே 30) மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் தாக்கல் செய்தார். திருச்சி மாநகராட்சி வருவாய் குடிநீர் மூலதன நிதி மொத்தம் 21 லட்சத்து 40 ஆயிரத்து 11ஆக திட்டமிடப்பட்டுள்ளது. உபரி பட்ஜெட்டாக 92 லட்சத்து 49ஆயிரம் உள்ளதாக வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் கல்விக்கு என்று ரூ.21.98 லட்சம் திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம், மேலப்புதூர் நடைமேம்பாலம் மற்றும் சூரிய ஒளி மூலம் மின் சக்தி தயாரித்தல், ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின்கீழ், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை இணைப்பினை மேம்படுத்துதல், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், சீர்மிகு சாலைகள், நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணிகளும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

முக்கியமாக திருச்சியில் உள்ள 65 வார்டுகளில் ரூபாய் 37.50 லட்சம் மதிப்பீட்டில் 128 புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் வார்டு ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் செலவு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் 2022-2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளை நிதிக்குழு தலைவர் முத்துசெல்வம் அறிவித்தார். அரை மணி நேரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. மே மாதம் 2ஆம் தேதி மீண்டும் மாநகராட்சிக் கூட்டம் நடைபெறும் என திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தெரிவிக்க இன்றைய கூட்டம் நிறைவுபெற்றது.

இதையும் படிங்க:மேயர் தலைமையில் நடைபெறவிருந்த குறைதீர் கூட்டம் ரத்து

Last Updated : May 30, 2022, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details