கரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் நேற்று (ஜூன் 20) ஒரே நாளில் 2,396 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 56,845 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.