கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் கடன் தவணையை வசூலிப்பதில் ஆர்வம் காட்டக்கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
ஆனால் இதையும் மீறி சில வங்கிகள் தீவிர கடன் வசூலில் ஈடுபட்டு மக்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்தன. இந்நிலையில் இது தொடர்பாக அதிகளவில் புகார்கள் எழுந்தது.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”திருச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், உள்ளூர் பகுதி வங்கிகள், அனைத்து வணிக வங்கிகள்,
அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் , வீட்டுவசதி நிதி நிறுவனங்கள், கடன் வழங்கும் நிறுவனங்கள், வேளாண் கடன்கள், சில்லறை, பயிர் கடன்கள் உள்பட அனைத்து விதமான கடன் தவணை தள்ளிவைப்பு காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மார்ச் ஒன்றாம் தேதி மற்றும் மே 31ஆம் தேதிக்கு இடையில் வரவிருக்கும் அனைத்து கடன் மீள செலுத்தும் தவணைகளை தள்ளிவைத்து வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளன.
வங்கிகள் கடன் வசூலில் ஈடுபட்டால் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
திருச்சி: வங்கிகள் கடன் வசூலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரித்துள்ளார்.
இக்கடன் தவணை தள்ளிவைப்பு காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள தொகையின் மீது வட்டி கணக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிக்கைக்கு மாறாக கடன்தாரர்கள் தவணை தொகையை செலுத்திட வங்கிகள், நிறுவனங்கள் சார்பில் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வருகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.