திருச்சி:தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு, ஜமால் முகமது கல்லூரியில் அமையவுள்ள வாக்கு எண்ணும் மையத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு இன்று (ஜன 29) நேரில் ஆய்வு செய்தார்.