தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக அமைப்புகள் சார்பில் கரோனா விழிப்புணர்வு பரப்புரை - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு

திருச்சி: ஆட்சியர் அலுவலகத்தில் சமூக அமைப்புகள் சார்பில் கரோனா விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

trichy-collector-office-corona-awareneess
trichy-collector-office-corona-awareneess

By

Published : Mar 16, 2020, 7:20 PM IST

சீனா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரசுக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரசு சார்பிலும் விழிப்புணர்வு பரப்புரை நடத்தப்படுகிறது.

இதைத் தொடர்ந்து திருச்சி ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு, தென்னக நுகர்வோர், மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சார்பில் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது. திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி இந்த விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா விழிப்புணர்வு பரப்புரை

மேலும், சமூக அமைப்பு தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் யோகா குரு கிருஷ்ணகுமார், திருச்சி மாவட்ட பணத்தாள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களை அளித்தனர்.

இதையும் படிங்க: கொரோனா அறிகுறி: சிறப்பு மருத்துவ முகாம் கொண்டுசெல்லப்பட்ட பயணிகள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details