தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி மத்திய சிறை கைதிக்கு கரோனா! - Trichy central jail prisoner test corona positve

திருச்சி : மத்திய சிறை கைதிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அரசு மருத்துவமனையின் தனிமைப்படுத்தும் மையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மத்திய சிறை
திருச்சி மத்திய சிறை

By

Published : May 27, 2020, 12:29 PM IST

திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என சுமார் ஆயிரத்து 300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சுமார் 40 வயது கைதி ஒருவர், 2009ஆம் ஆண்டுமுதல் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் இருந்துவருகிறார்.

வழக்கமாக தண்டனைக் கைதிகளுக்கு அளிக்கப்படும் மன அழுத்தத்தைப் போக்குவதற்கான பயிற்சி, சென்னை புழல் சிறையில் அளிக்கப்பட்ட நிலையில், அதில் கலந்துகொள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த கைதியும், மேலும் மூன்று பேரும் பயிற்சிக்குச் சென்றனர்.

தொடர்ந்து, பயிற்சி முடிந்து நான்கு பேரும் சில தினங்களுக்கு முன்பு திருச்சி மத்திய சிறைக்குத் திரும்பிய நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த கைதிக்கு காய்ச்சல், இருமல் அதிகரித்த வண்ணம் இருந்தது.

தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்படுத்தும் மையத்தில் தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருடன் சென்னை சென்றுவந்த மூன்று பேர், அவர் அடைக்கப்பட்டிருந்த பிளாக்கில் உள்ள சுமார் 30 கைதிகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :சேவையை மீண்டும் தொடங்கிய ஓலா!

ABOUT THE AUTHOR

...view details