திருச்சி:தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில இளைஞரணி கருத்தரங்கு, மாநிலத் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது., மாநில பொதுச் செயலாளர் கணேசன், மாநில பொருளாளர் சங்கர ராமநாதன் ஆகியோர் முன்னிலையில், பிரபல கர்நாடக இசைக்கலைஞர் சந்தானகோபாலன் ஆனந்த் கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஷ் வரவேற்புரை ஆற்றினார். இதில், ஐ.டி.துறையில் இளைஞர்கள் என்ற தலைப்பில் பிரகாஷ் செம்பை, பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் ஆகியோர் பேசினர்.