முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95ஆவது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட பாஜக சார்பில் கே.கே. நகர், சுந்தர் நகர், கல்லுக்குழி மாரியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
இனிப்புகள் வழங்கி வாஜ்பாய் பிறந்தநாளை கொண்டாடிய பாஜகவினர்! - முன்னாள் பிரதமர் வாஜ்பாய்
திருச்சி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பாஜகவினர் கொண்டாடினர்.
Trichy BJP Memebers Celebrating Vajpayee Birthday
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பாஜக மண்டல தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 25ஆம் தேதியில் பிறந்த முன்னாள் பிரதமருக்கு 25 அடி சிலை - திறந்து வைக்கிறார் இந்நாள் பிரதமர்!