திருச்சிமாவட்டம், ராம்ஜிநகர் மில்கேட் முன்பு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கன்டோன்மென்ட் மண்டல தலைவர் மணிகண்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராம்ஜிநகர் பகுதியை மையமாகக் கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு கஞ்சா விற்கப்படுவதாக கூறப்பட்டது.
எனவே, உடனடியாக கஞ்சா விற்பனையை தடை செய்ய காவல்துறையினர் முன்வர வேண்டும். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதுமட்டுமின்றி கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றால் நாங்களே நேரில் சென்று காந்திநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைப்போம் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.