தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி - Trichy Awareness Painting Exhibition

திருச்சி: ஈர நிலம் அமைப்பின் சார்பில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி நடைபெற்றது.

இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி
இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி

By

Published : Jan 28, 2020, 11:20 PM IST

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவிய கண்காட்சி நடைபெற்றது. இதில் ஈர நிலம் அமைப்பின் சார்பில் ஓவியர் தமிழரசனால் வரையப்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. கள்ளக்குறிச்சி முதல் கடலூர் வரை இந்த ஓவியக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சியில் நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சகாயராஜ் தலைமை வகித்தார். ஓவிய கண்காட்சியை மத்திய சுங்க துறை இணை ஆணையர் வெங்கடேஸ்வரன் தொடங்கிவைத்தார். பள்ளியின் முதல்வர் சின்னப்பன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட ஓவிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மேலும், தமிழ் மொழியின் சிறப்பு, தமிழர் பண்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன.

இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி

இதுகுறித்து ஓவியர் தமிழரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாறிவரும் சூழலை மாணவ, மாணவிகள் அறிந்துகொள்ளும் வகையில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இந்த கண்காட்சி கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவருகிறது. இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகள் கடலில் மூழ்கும் அபாயம் இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அதனால் இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது" என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க:நோட்டு புத்தகங்களை வைத்து திருவள்ளுவர் ஓவியம் வரைந்து சாதனை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details