தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் நல்லாசிரியர் விருதுபெறும் 14 ஆசிரியர்களின் பெயர் பட்டியல் வெளியீடு! - Dr Radhakrishnan award

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற இருக்கும் 14 ஆசிரியர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Trichy award winning teachers list
Trichy award winning teachers list

By

Published : Sep 5, 2020, 4:36 PM IST

இது தொடர்பாக திருச்சி ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பள்ளிக் கல்வித் துறையால் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதிற்காக திருச்சி மாவட்டம் குமுளுரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி விரிவுரையாளர் அன்புச்செல்வன், முசிறி துலையாநத்தம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் ஹரிஹரராமச்சந்திரன்,

திருச்சி சேவா சங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் சுகிர்தா பாய், அரசங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முஹம்மது பாரூக், சாவித்திரி வித்யாசாலா இந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை உஷா, ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ், இ.ஆர். மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் ராமகிருஷ்ணன்,

பொன்மலைப்பட்டி டிஇஎல்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி டெய்சி ராணி, தாராநல்லூர் அலங்க விலாஸ் சிங்காரப்பிள்ளை நினைவு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை உதயராணி, திருவெறும்பூர் கைலாசபுரம் தமிழ் பயிற்றுமொழி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, வையம்பட்டி முகவனூர் புனித சிசிலியா தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியை எமல்டா ராணி,

உப்பிலியபுரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி, முசிறி ஜெயங்கொண்டான் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, திருச்சி ஏர்போர்ட் ஆதம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஆரிபா அப்துல்லா ஆகிய 14 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு செப்டம்பர் 7ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் விருதுகள் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details