தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடத்தையில் சந்தேகம்.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்.. குடிகார ஆட்டோ டிரைவர் கைது! - ஆட்டோ டிரைவர் கைது

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை எரித்துக் கொன்ற ஆட்டோ டிரைவரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கௌதமி
கௌதமி

By

Published : Jan 8, 2022, 8:40 AM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலஸ்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆரிமுத்து. இவரது மகன் ராஜா வயது. 33 வயதான இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

இவருடைய மனைவி கௌதமி வயது (28). இவர்களுக்கு 9 வயதில் ஒருமகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளார். கடந்த சில மாதங்களாகவே ராஜா மதுவிற்கு அடிமையாகி ஆட்டோ ஓட்ட செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

மேலும், அதீத மது போதையில் மனைவியை அடித்து அவரிடம் இருந்து அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜன.6) மாலை கௌதமி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் கௌதமியின் உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனைத்தொடர்ந்து காலையில் ராஜாவின் தாயார் பச்சையம்மாள் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது கரும்பு தோட்டத்தில் எரிந்த நிலையில் கௌவுதமி சடலமாக கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பச்சையம்மாள் கூச்சலிட்டார். இதையடுத்து இது குறித்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவலர்கள், கௌதமியின் உடலை மீட்டு உடற்கூராய்வு நடத்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் ராஜாவை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, ராஜா, மனைவி கௌதமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அப்போது, “கௌதமிக்கும் அருகேயுள்ள இளைஞர் ஒருவர் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகித்தேன், மேலும் அவர் எனக்கு மது குடிக்க பணம் தரவில்லை, இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை அடித்தேன். அப்போது மயங்கி விழுந்த அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது உடலை கரும்புக் காட்டுக்கு எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினேன்” என்றார்.

இதையடுத்து ராஜா மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிங்க : மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவர்!

ABOUT THE AUTHOR

...view details