தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Vijay: வா தலைவா வா.. சட்டமன்றத்தின் ஆளுமையே.. ஊரெல்லாம் விஜய் ரசிகர்கள் போஸ்டர்! - கோவை விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் நாளை தனது 49-வது பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் ரசிகர்களால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருச்சி மற்றும் கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

vijay fans
vijay fans

By

Published : Jun 21, 2023, 4:40 PM IST

விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள்

திருச்சி: தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆகிறது. இவரது அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் நாளை தனது 49-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

விஜய் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், பலவிதமான போஸ்டர்களையும் அடித்து விஜய் ரசிகர்கள் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்..

திருச்சி கண்டோன்மெண்ட் மத்திய பேருந்து நிலையம் அருகே திருச்சி மாவட்ட நடிகர் விஜய் ரசிகர்களால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில்‌ எதிர்கால "தமிழக சட்டமன்ற ஆளுமையே" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் திருச்சி தெற்கு மாவட்ட தலைமை தளபதி மக்கள் இயக்கம் சார்பில் "தமிழகம் போற்றும் வரலாறே மாநிலங்கள் வியக்கும் மகத்துவமே" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு அடிக்கல் நாட்டும் வகையில் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு மக்கள் நலப் பணிகளை ரசிகர்கள் மூலம் நடிகர்‌‌ விஜய் செய்து வருகிறார். மேலும் 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவி நந்தினி உள்ளிட்ட தொகுதி வாரியாக முதன்மை மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசு வழங்கினார்.

அதே மேடையில் மாணவர் மத்தியில் பேசும் போது, "ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் உங்களுடைய பெற்றோர்களும் வாங்க அனுமதிக்காதீர்கள். ஏனென்றால் வருங்கால தலைவர்களை தேர்வு செய்யப் போகிறவர்கள் நீங்கள்தான் வரும் தலைமுறைகள் நன்றாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.

இந்நிலையில் மேடையில் பேசிய மாணவி எங்களுடைய ஓட்டுக்கள் மதிப்புள்ளதாக மாற வேண்டும் என்றால் நீங்கள் வர வேண்டும் என பேசினார். மேலும் இந்நிகழ்ச்சி அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஏற்கனவே நடந்து‌ முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு புதுக்கோட்டை, ராணிப்பேட்டை உள்ளிட்ட நகராட்சிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியுள்ளனர். அதே போன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் தனித்தோ, கூட்டணி வைத்தோ வெற்றி பெற்று அரசியலில் காலூன்ற வேண்டும் என்பதற்காக முக்கிய நகரங்களில் மாநாடு நடத்த திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகிறது.

திருச்சியை போல கோவையிலும் விஜய் ரசிகர்கள் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளனர். கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர் மன்றத்தினர் "நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா" என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:Karan Deol: திருமண புகைப்படங்களை வெளியிட்ட கரண் தியோல்!

ABOUT THE AUTHOR

...view details