தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதுதவிர டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் ஆகியவை தனித்தனியாக போட்டியிடுகின்றன.
இந்நிலையில் திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக சாருபாலா தொண்டைமான் அறிவிக்கப்பட்டார்.
இதனிடையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இதில் மதியத்திற்கு மேல் தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
அமமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் இந்த வகையில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் சாருபாலா தொண்டைமான் இன்று மதியம் மனுத்தாக்கல் செய்தார். அவருடன் மாவட்ட செயலாளர்கள் மனோகரன், சீனிவாசன் ஆகியோர் உடன் வந்தனர்.
அமமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் திருச்சி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலரான சிவராசு வேட்பு மனுவை பெற்றுக் கொண்டார். இதுகுறித்து சாருபாலா தொண்டைமான் நிருபர்களிடம் கூறுகையில், நான் ஏற்கனவே இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளேன்.
அமமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் திருச்சி மக்களின் கோரிக்கை என்ன என்பது எனக்கு தெரியும். இந்த முறை கட்டாயம் வெற்றி பெறுவேன். எங்களுக்கு சின்னம் ஒரு பெரிய விஷயம் கிடையாது. டிடிவி தினகரன் தான் எங்களது சின்னம். அவரது பெயரை வைத்தே 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.
கட்சி சின்னத்தைக் குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது முதற்கொண்டு தமிழகம் முழுவதும் அமமுக வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.