தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமான நிலையத்திற்கு புதிய நவீன தீயணைப்பு ஊர்தி

திருச்சி: விமான நிலையத்திற்கு ரூ.4.10 கோடி மதிப்பிலான புதிய நவீன தீயணைப்பு ஊர்தி இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

new fire rescue vehicle

By

Published : Apr 30, 2019, 1:47 PM IST

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய ஓடுதள விரிவாக்கம், புதிய முனையங்கள் அமைப்பது உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இங்கு சமீபத்தில் ஒரு மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சாரத் திட்டம் தொடங்கப்பட்டது. இதையடுத்து தற்போது புதிய நவீன தீயணைப்பு வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

புதிய நவீன தீயணைப்பு ஊர்தி

இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ஊர்தி மும்பையிலிருந்து லாரி மூலம் கொண்டுவரப்பட்டது. ரூ.4.10 கோடி மதிப்பிலான இந்த வாகனம் ஆறாயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டது. மேலும், அதிவேகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கக் கூடியது. தீ மேலும் பரவாமல் விரிவான முறையில் செயல்பட்டு அளிக்கக் கூடிய உபகரணங்கள் இதில் உள்ளன. இந்த வாகனம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details