ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை வெள்ளைய புரத்தைச் சேர்ந்தவர் அலிபாய் என்கிற ராவுத்தர் நைனா முகம்மது (45). இவர் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறார். வெளிநாடுகளிலிருந்து பொருட்களை வாங்கி வருவதற்கும், இங்கிருந்து எடுத்துச் செல்வதற்கும் 10 பேர் இவரிடம் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் திருச்சி வந்த இவரது பணியாளர் பொருட்களை எடுத்து வந்துள்ளார். அதனை அறிந்த சுங்கத்துறை ஆய்வாளரான விஜயகுமார் (38) சுங்கத்துறை வரியாக ரூ. 3 லட்சம் செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளார். அப்போது அலிபாபாவின் ஊழியரிடம் பணம் இல்லை என்று தெரிவித்த நிலையில், வரி பணத்தை செலுத்திவிட்டு பொருட்களை எடுத்துச் செல்லுமாறு சுங்கத்துறை ஆய்வாளர் விஜயகுமார் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.