தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக கடத்தல் கரன்சி பறிமுதல்! - trichy airport customs

திருச்சியில் இருந்து ஷார்ஜா மற்றும் மலேசியா கடந்தவிருந்த அமெரிக்க டாலர்கள் மற்றும் இந்திய ரூபாய் நோட்டுக்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 22, 2023, 7:47 AM IST

திருச்சி:திருச்சியில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள சில முக்கிய நகரங்களுக்கு விமானக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஷார்ஜா செல்வதற்காக ஏர் இந்தியா விமானம் தயார் நிலையில் இருந்தது. இதில் பயணம் செய்யும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் உடைமையை சோதனை செய்த போது அதில் கட்டுக்கட்டாக அமெரிக்கா டாலர்கள் மறைத்து கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பயணியிடம் இருந்து இந்தியா மதிப்பில் ரூ.7,41,060 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல திருச்சியில் இருந்து காலை 10.30 மணியளவில் மலிண்டோ விமானம் மூலம் கோலாலம்பூர் செல்ல இருந்த ஒரு ஆண் பயணியின் உடைமைகளை சோதனை செய்த போது அதில் 12 ஆயிரம் அமெரிக்க டாலர்களை, இந்திய பணத்திற்கு இடையில் மறைத்து கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பயணியிடம் இருந்து ரூ.9,66,600 லட்சம் அமெரிக்க டாலர்களையும் 13,10,000 லட்சம் இந்திய ரூபாயையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேற்கண்ட பயணிகள் இருவரிடம் இருந்து இந்திய மதிப்பில் ரூ.30,17,660 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளை (இந்திய ரூபாய் உள்பட) சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குடியரசு தின விழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details