தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி விமான நிலையத்தில் ரூ.13 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்.. - தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் உடைமைகளுக்குள் மறைத்து ரூ.13 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்த முயன்றவரை சுங்கத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

கடத்தல் தங்கம்
கடத்தல் தங்கம்

By

Published : Nov 9, 2022, 12:31 PM IST

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் இண்டிகோ விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பயணிகளிடம் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சுங்கத் துறை அதிகாரிகள் முகமது நிசார் என்பவரின் உடைமைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த தங்கத்தை கைப்பற்றினர்.

தகடு மற்றும் உருண்டை வடிவில் இருந்த 13 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 259 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த முகமது நிசாரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு ஆளுநரை திரும்பபெற வேண்டும்; எம்.பி.க்களின் மனு குடியரசு தலைவர் அலுவலகத்தில் ஒப்படைப்பு

ABOUT THE AUTHOR

...view details